×

கை, கால்களை கட்டிப்போட்டு கணவருக்கு சிகரெட்டால் சூடு வைத்த கொடூர மனைவி: ரகசிய கேமராவால் சிக்கினார்


லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் பாலில் போதை மருந்து கொடுத்து கணவரை கட்டிப்போட்டு சிகரெட்டால் சூடு வைத்து சித்ரவதை செய்த சைக்கோ மனைவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உத்தரப்பிரதேச மாநிலம், பிஜ்னோர் பகுதியை சேர்ந்தவர் மேனான் ஷைடி, அவரது மனைவி மெஹர் ஜகான்(30). இவர்கள் கடந்த ஆண்டு நவம்பரில் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். திருமணம் முடிந்ததுமே தனிக்குடித்தனம் போக வேண்டும் என்று மெஹர் ஜகான் கூற, வேறு வழியின்றி மேனான் ஷைடி அதற்கு ஒப்புக் கொண்டுள்ளார். தனித்குடித்தனம் தொடங்கிய சில நாட்களிலேயே மெஹர் ஜகானின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்தது. வீட்டிலேயே சரக்கடித்தார், சிகரெட் புகைத்தார். அதோடு, வேறொரு வாலிபருடன் தொடர்பு இருப்பதும் தெரிந்தது.

தட்டி கேட்ட கணவரை, போலீசில் என்னை கொடுமைப்படுத்துவதாக பொய் புகார் கொடுத்து சிறையில் தள்ளிவிடுவேன் என்று மிரட்டத் துவங்கியுள்ளார் மெஹர். நாளுக்குநாள் மெஹரின் கொடுமை அதிகமானது. கணவனை அடித்து உதைத்து சித்ரவதை செய்துள்ளார். இது பற்றி புகார் செய்த மேனான் ஷைடியை சாமாதானப்படுத்தி அனுப்பி உள்ளது போலீஸ். இதையடுத்து வீட்டிலேயே மனைவிக்கு தெரியாமல் சிசிடிவி கேமராக்களை பொருந்தினார் ஷைடி. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் கணவருக்கு பாலில் போதை மருந்து கலந்து கொடுத்து மட்டையாக்கியுள்ளார் மெஹர். பின்னர், கட்டிலில், கணவனின் கை, கால்களை கட்டி, உடைகளை அவிழ்த்து நிர்வாணமாக்கி மெஹர் சித்ரவதை செய்துள்ளார். கணவனின் நெஞ்சு மீது அமர்ந்து கொண்டு அவரை அடித்து துன்புறுத்தியதோடு, அவரது பிறப்புறுப்பில் சிகரெட்டால் சூடு வைத்துள்ளார்.

வலி தாங்காமல் துடித்த ஷைடி, என்னை விட்டுரு என்று கெஞ்சியபோதும் மெஹரின் வெறி அடங்கவில்லை. ஆத்திரம் அடங்காமல் கணவனின் பிறப்புறுப்பை காய்கறி வெட்ட பயன்படுத்தும் கத்தியால் நறுக்க முயற்சி செய்தார். கணவன் அலறி துடிக்கவே விட்டுள்ளார். இந்த கொடூர காட்சிகள் படுக்கையறையில், பொருத்தப்பட்டிருந்த ரகசிய கேமராவில் பதிவாகி இருந்தது. மருத்துவ சிகிக்சைக்கு பின் வீடு திரும்பிய கணவன் ஷைடி, அந்த வீடியோ காட்சிகளை போலீசிடம் ஒப்படைத்து, மனைவியிடம் இருந்து காப்பாற்றுங்கள் கதறியுள்ளார். அந்த வீடியோவை பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, மெஹர் ஜகானை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஷைடி மனைவியால் சித்ரவதை செய்யப்படும் வீடியோ காட்சிகள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

The post கை, கால்களை கட்டிப்போட்டு கணவருக்கு சிகரெட்டால் சூடு வைத்த கொடூர மனைவி: ரகசிய கேமராவால் சிக்கினார் appeared first on Dinakaran.

Tags : Lucknow ,Uttar Pradesh ,Menon Shaidi ,Bijnore, Uttar Pradesh ,
× RELATED உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில்...